THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

           



திருத்தணி் கோவில்

 


 

திருத்தணி என்ற இந்த முருகன் தலம் சென்னை ரேணிகுண்டா தடத்தில் உள்ளது. அரக்கோணத்தில் இருந்து வடக்கே 12 கி.மீ தூரத்தில் உள்ளது திருத்தணி. ஏராளமான பஸ் வசதிகளும் ரயில் வசதிகளும் உள்ளன.

கந்தபுராணத்தில் மலைகளில் சிறந்தது என்று இந்தத் திருத்தணி மலை குறிப்பிடப்படுகிறது. கைலாய மலைக்கு ஈடான பெருமை பெற்றது என்றும் கூறப்படுகிறது. திருப்புகழிலும் அருணகிரி நாதர் இத்தணிகைமலையைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். நமது புராண சாஸ்திரங்களில் கூறியுள்ளபடி முருகனுக்கு 16 வகை அழகிய உருவங்கள் உண்டு. அவற்றில் இந்தத் தணிகைமலை நாயகன் ஞானசக்தியை அருளும் ஞான சக்திதரன் எனச் சிறப்புப் பெறுகிறார்.

வள்ளியை மணந்துகொண்டு திருத்தணி மலையைத் தலமாகக் கொண்டு அருள்பாலித்து வருவதாகப் புராணம் கூறுகிறது.

சற்று ஏறத்தாழ 400 அடி உயரம் கொண்டது திருத்தணி மலை. இந்த மலை அடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை முருகன் வரவழைத்த கங்கை நீர். இதற்குக் குமரதீர்த்தம் என்றும் பெயர். மலைக்கு வடக்குப் பக்கம் உள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்றும் பிரம்மசுனை என்றும் கூறப்படுகிறது. இங்கே வி நாயகரையும் பிரம்மலிங்கத்தையும் காணலாம். இந்தத் தலம் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு இலக்கணமாகத் திகழ்கிறது. காதர் என்ற நவாப் நோயால் பொரிதும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது தணிகைக் குமரன் அவர் நோயைக் குணப்படுத்தினார் என்றும் தனது காணிக்கையாக வாத்திய மண்டபம் ஒன்றையும் பிரசன்னகாதா£ஸ்வரர் என்ற சிவனுக்கு ஆலியம் ஒன்றையும் அமைத்தார் என்றும் கூறப்படுகிறது. நவாப் அமைத்துத் தந்த அந்த வாத்திய மண்டபத்தில் பூஜை நேரங்களில் முஸ்லீம் வாத்தியக்காரர்கள் வாத்தியம் வாசிப்பது வழக்கமாம்.

செங்கழு நீர் பிள்ளையார் சந்நிதியும் இந்திரசுனையும் உண்டு. இந்த இந்திரசுனை நீரால் முருகன் அபிஷேகம்னடபெறுகிறது. இதில் மற்றவர் யாரும் நீராட முடியாது. இந்தச் சுனையில் இந்திரன் முக்காலமும் முருகனை எண்ணித் துதித்துத் தவம் இருந்து பெறற்காரிய பேறுகளைப் பெற்றதாக வரலாறு கூறுகிறது. தாரகாசுரனுடன் போர் புரிந்து தனது சக்ராயுதத்தை இழந்த திருமால் முருகனை எண்ணித் துதித்து அதனைப் பெற்றார். ஆனால், திருமாலிடம் இருந்து பறித்த சக்ராயுதத்தை முருகன் மீது தாரகன் ஏவிவிட, அதனைத் தன் மார்பில் ஏற்றாராம் முருகன். பின்னர் அதனையே திருமாலுக்கு அளித்துவிட இன்னமும் முருகனின் திருமார்பில் சக்ராயுதம் இருந்த இடம் நன்கு தரிகிறது.

விஷ்ணுதீர்த்தம், வாசுகி தீர்த்தம் ஆகியவையும் உண்டு. வாசுகி தீர்த்தமே நாக தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்தில் மயிலுக்குப் பதிலாக இந்திரனின் ஐராவதம் இருப்பது விசேஷம். தனது மகளைமணந்து கொண்டதற்காக இந்திரன் இதை முருகனுக்குப் பரிசாக அளித்தாராம். தனக்குப் பரிசாக வந்து விட்டாலும் இந்திரன் சம்பத்துக்குக் குறைவு வந்து விடக்கூடாது என்பதற்காக அதனை இந்திர லோகத்தைப் பார்த்தவாறு கிழக்கு திசை நோக்கி நிற்குமாறு முருகன் செய்துவிட்டார் என்பர்.

இந்தத் தலத்தில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் நடக்கும் ஆருத்ரா தா¢சன விழாவில் பாலமுருகனுக்குப் பன்னீரில் அல்ல வென்னீரில் அபிஷேகம் செய்து வருவது விசேஷம் ஆகும்.

திருத்தணி முருகனுக்கு ஆடிக் கிருத்திகை விழா அமோகமான விழாவாகும்.