THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 



திருப்பரங்குன்றம் கோவில்

 


மதுரையிலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். முருகனுக்கு¡¢ய அறுபடை வீடுகளில் திருப்பரங்குன்றம் முதலாவது ஆகும்.

அழகிய சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த உயர்ந்த கோபுரம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திடும் வகையில் அமைந்துள்ளது. மலையைக் குடைந்து அற்புதமாக அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் கற்களில் யாழிகளின் அணிவகுப்பும் அழகிய மண்டபமும் மண்டபங்களில் அதி அற்புதமான வேலைப்பாடுகள் கொண்ட சிற்ப வேலைப்பாடுகளும் ஆக 48 கல் தூண்களைக் கொண்டது. கோயிலிலே மூலவராகக் காட்சி அளிப்பவர் பரங்கி நாதராகிய சிவலிங்கம், தெய்வானையுடன் அழகிய மணவாளராகக் காட்சி தருகிறார் முருகன்.

கோயிலிலே மூலவராகக் காட்சி அளிப்பவர் பரங்கி நாதராகிய சிவலிங்கம், தெய்வானையுடன் அழகிய மணவாளராகக் காட்சி தருகிறார் முருகன். நக்கீரர் திருமுருகாற்றுபடை இயற்றியது திருப்பரங்குன்றத் தலத்திலே தான்.

நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று சிவபெருமானுடன் வாதித்த நக்கீரர் குளக்கரையில் அமர்ந்து பூஜை செய்துகொண்டு இருந்தார். சிவனை நினைத்துத் தவம் செய்துகொண்டு இருந்தவா¢ன் சிந்தை மட்டும் ஏனோ அன்று தவத்தில் ஒன்றுமில்லை. அதற்கும் காரணம் உண்டு. குளக்கரையில் அரசமரம் ஒன்று உண்டு. அந்த அரசமரத்திலும் குளத்திலும் ஒரு வி நோதம் நடந்தது. அரச மரத்தின் இலை காற்றினால் தரையில் உதிர்ந்ததால் அது பறவையாக உயிர்பெறும். தரையில் விழாமல் தண்ணீ¡¢ல் விழுந்தாலோ மீனாக உருப்பெறும். ஆனால், நக்கீரர் தவம் செய்த அன்று அரச மரத்திலிருந்து உதிர்ந்த இலைகளில் ஒன்று பாதி தரையிலும் மறுபாதி தண்ணீ¡¢லும் விழுந்துமுறையே பறவையாகவும் மீனாகவும் மாறி இரண்டும் ஒன்றினை ஒன்றுவிடாமல் இழுத்தபடியும் பிடித்தபடியும் தவித்துக் கொண்டு இருந்ததைக் கண்ணுற்ற நக்கீரா¢ன் சிந்தனை தடுமாறி தவத்தில் மனம் முழுவதுமாக ஈடுபட முடியாமல் தவித்த வேளையில், பூதம் ஒன்று ஏற்கனவே குகையில் 999 பேர்களைப் பிடித்துச் சென்று சிறை வைத்துள்ள நிலையில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது என்று மகிழ்ந்து ஆயிரமாவது நபராக நக்கீரரைப் பிடித்துச்சென்று சிறை வைத்து இந்த 1000 பேர்களை சாப்பிட்டுவிடக் காத்துக் கொண்டிருந்தது.

தான் அவர்களை உண்ணும் முன்னர் பூதம் நீராடி விட்டு வருவதற்கு வெளியே சென்றது. தன்னோடு சேர்த்து 1000 பேர்களைப் பூதம் உண்டு விடக்கூடிய நிலையை அறிந்த நக்கீரர் முருகப் பெருமானை நினைத்து முறையிட்டுப் பாடினார். நக்கீரா¢ன் பாடல் கேட்டுப் பரவசம் அடைந்த முருகப்பெருமான் தனது திருக்கை வேலால் குகையைப் பிளந்து பூதத்திடமிருந்து நக்கீரர் பாடியது திருமுருகாற்றுப்படை ஆனது. கைலாய மலையிலே அன்னை மடியில் பாலகனாக முருகன் அமர்ந்திருந்த வேளையில் தந்தை சிவபெருமான் பார்வதிதேவிக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசிக்க அதனை அன்னை மடியில் இருந்த பாலமுருகன் வெகு நுட்பமாக அறிந்து தனது நினைவில் வைத்துக் கொண்டு விட்டார். பிரணவத்தினையும் அதன் பொருளையும் தக்க குரு மூலமே உபதேசம் பெறவேண்டும். அப்படி அல்லாமல் தான் உமையவளுக்கு உபதேசித்ததை மனனம் செய்துவிட்ட மைந்தன் மீது சற்று சினம் கொண்டார், சிவபெருமான்.

தந்தையின் சினம்பற்றி அறிந்துகொண்ட மைந்தன் முருகனோ தான் செய்த தவற்றை உணர்ந்து அதற்குப் பா¢காரம் காணவேண்டி கயிலையைவிட்டுக் கிளம்பி திருப்பரங்குன்றம் வந்துசேர்ந்து கடுந்தவம் இயற்ற, மைந்தன் முருகனின் தவத்தை மெச்சிய கயிலை நாதன் உமையவளுடன் பரங்கி நாதர் ஆவுடை நாயகி என்ற பெயருடன் முருகனுக்குக் காட்சி தந்து அருளினார்.