 |

திருச்செங்கோடு சேலத்திற்கு தெற்கே உள்ளது. திருச்செங்கோடு மலையில் 1900 அடி
உயரத்தில் கோயில் உள்ளது. 200 படிகள் ஏற வேண்டும்.
முதலில் மலை ஏறத் தொடங்குமுன் அதுவும் முதல் படியிலேயே உள்ள கஜமுகப்படி வி நாயகரைத்
தா˘சனம் செய்யலாம். செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் திருமடம் திருமுடியார்
மண்டபம் இவற்றைக் கடந்தால் கற்பாறையில் 60 அடி நீளத்தில் ஐந்து தலைநாகம் ஒன்று
செதுக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இன் நாகத்தின் தலையில் படத்தில் நடுவில் லிங்கம்
செதுக்கப்பட்டு உள்ளது மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது. சிங்கத்தூண் மண்டபம்,
அடுத்து அறுபதாம்படி என்னும் சத்தியப்படி உள்ளது. ஆமாம் ஏதேனும் வழக்கு என்று
வந்தால் தான் சொல்வது சத்தியம் தான் என்பதைக் குறிக்க இந்தப் படிகளில் ஏறி முருகன்
அறிய என்று சொல்ல வேண்டும். இன்றும் இந்த வட்டார மக்கள் இதனைக் கடைப்பிடிக்கிறார்கள்.
செட்டிக் கவுண்டன் மண்டபம், தேவரடியான் மண்டபம், இளைப்பாறு மண்டபம் அடுத்து கோபுர
வாசல் மண்டபம், இதற்குக் கீழ்ப்புறம் 20 படிக்கட்டுகள் இறங்கினால் கோபுரத்தின்
பிரகாரம் அடையலாம். செங்கோட்டு வேலவர் மிக அழகாகக் காட்சி தருகிறார். மகா மண்டபம்
இங்கே அர்த்த நாĄŁஸ்வரரின் உற்சவமூர்த்தியைத்
தரிசிக்கலாம். தலையில்
விரிசடைக்குப்
பதில் அழகாகச் சீவி முடிக்கப்பட்ட, அதுவும் ஆண்டாள் கொண்டை வலது பாகம் ஆண்மையும்,
இடது பாகம் பெண்மையும் வலது பாகத்தில் கரத்தில் கோல் ஒன்றை ஏந்திய வண்ணம்
கம்பீரமாகக் காட்சி தருகிறார். இரண்டு கரங்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது காலடியில் மூன்று கால்களும் பிருங்கி முனிவர் தொழுதபடி
இருப்பதையும் காணலாம். வடக்குப் பக்கம் மேற்கு நோக்கி நிற்கும் அர்த்த
நாரீஸ்வரரைத்
தா˘சிக்கலாம். சிலை வெண்மை நிறத்தில் பளிச்சென்று இருக்கும். இவர் காலடியில் நீர்
ஊற்றும் அதில் சதா ஊறிக் கொண்டிருக்கும் நீரையும் காணலாம். மற்றும் விஸ்வ நாதர்,
விசாலாட்சி, ஆதிகேசவப் பெருமாள், நாகேஸ்வரர் ஆகியோரையும்
தரிசிக்கலாம்.
திருச்செங்கோடு மலை சிவந்த நிறத்தோடு இரண்டு சிகரங்கள் பின்னிப்
பிணைந்தது போன்ற அமைப்பில் உள்ளது. இத்தலத்தில் உறையும் அர்த்த
நாரீயைப் போலவே மலை
உள்ளது. பின்னிக் கிடக்கும் பெருங்கோடாக இருப்பதால் அழகிய செங்கோடுமலை என்பது
திருச்செங்கோடு என்றானது இத்தலம் கொடிமாடச் செங்குன்றூர் என்றும் நாககிரி என்றும்
குறிப்பிடப்படுகிறது. இத்தலத்தை மாணிக்கவாசகர், சம்பந்தர், அருணகிரியார் ஆகியோர் பாடி
உள்ளனர்.
திரியம்பக உடையார் இக்கோயிலில் கட்டடப் பணியை கி.பி.16ம் நூற்றாண்டில் தொடங்கி
உள்ளார். மகா மண்டபம் காம்போஜி என்பவரால் தொடங்கப்பட்டு சீயாங்கட்டி முதலி என்பவரால்
நிறைவு பெற்றது. கி.பி. 1599ல் கூத்தப்ப நல்ல தம்பி காங்கேயன் என்பவர் இந்த
ஆலயத்தில் நிருத்த மண்டபத்தைக் கட்டியுள்ளார். கோயிலின் வெளிப் பிரகாரத்தில் குதிரை
மீது வீரர்கள் இருக்கும் 30 தனித்தனி கல்தூண்கள் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை.
ஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது மக்களை கடும் குளிர்காய்ச்சல், வாட்டுவதைக்
கண்டு ஈசனை மெய்யுருகப் பாடி மக்களைக் காத்து உதவினார் என்று கூறுகிறார்கள்.
|
 |