THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

           



திருச்செந்தூர் முருகன் கோவில்

 

தல வரலாறு

திருநெல்வேலி மாவட்டத்தில் கிழக்கே கடற்கரையை ஒட்டி திருச்செந்தூர் உள்ளது. புனிதமும் வளமும் அருளும் ஒருங்கே கொண்ட வெற்றி நகர் என்றும் வெற்றி மாநகர் என்றும் திருச்செந்தூர் பெயர் பெற்றது. அலைகடல் ஓரத்தில் முருகன் குடிகொண்டுள்ளதால் கடலின் ஒவ்வொரு அலையும் அவன் பாதம் கழுவிப் பின்னேயும் முன்னேயும் செல்லும் அழகே அலாதிதான்! அலைவாய், சீரலைவாய், திருச்சீரலைவாய் என்றும் பெயர்கள் உண்டு. அறுபடை வீடுகளில் இரண்டாவதுதான் திருச்செந்தூர்-செந்தூர்,வீரபாகுப்பட்டினம் வியாழதலம், சந்தானமலை என்றும் வழங்கப் பெறுகிறது.
திருச்செந்தூர், தலையாய தல வரலாற்றினைச் சிறப்பாகச் சொல்கிறது.

தனது ஐந்து திருமுகங்களுடன் இன்னொரு முகம் கொண்டு ஆறுமுகங்களின் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு பொறிகளை உதிர்த்து அந்த ஆறு பொறிகளை வாயு தேவர் ஏந்திச் சென்று அக்னி பகவானிடம் தந்துவிட அக்னி பகவானே அந்த ஆறு பொறிகளின் சக்தி மிகுந்த வெப்பத்தைத் தாங்காமல் கங்கையில் விட்டுவிட, கங்கை அவற்றை கொண்டு சரவணப் பொய்கையில் சேர்த்து விட, அங்கே அந்த ஆறு பொறிகளும் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றின.இக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்தனர். இவர்களை இந்த ஆறு குழந்தைகளையும் ஆறு முகங்களோடு ஒரே குழந்தையாக மாற்றுகின்றனர் சிவனும் சக்தியும் !

மூர்த்தி--தலம்--தீர்த்தம் இந்த மூவகைப் பெருமைகளும் கொண்டதுதான் திருச்செந்தூர். இங்கு மூர்த்தியாகத் திகழ்பவர் முருகப்பெருமான். ஆருமுகங்கள், பன்னிரெண்டு கரங்களுடன் திகழ்கிறார். தீர்த்தம் என்பது இத்திருச்செந்தூர் தலத்திலே ஒப்பில்லாத் தன்மை கொண்டது. அன்னை காயத்திกขக்கு உกขய மந்திர எழுத்துகள் இருபத்தி நான்கு ஆகும். ஒவ்வொரு எழுத்திற்கும் ஒவ்வொரு தீர்த்தமாக இருபத்து நான்கு தீர்த்தங்களும் கடற்கரையின் அருகருகே காணப்படுகின்றன! வதனாரம்ப தீர்த்தமும் நாழிக் கிணறு எனப்படும் புஷ்காணி தீர்த்தமும் பெரும் சிறப்பு வாய்ந்தவை.

இந்தத் திருத்தலம் தன்னில் உள்ள பன்னீர் மரங்களின் இலைக்குத் தனி மகத்துவம் உண்டு. பன்னிரண்டு நரம்புகள் உள்ள பன்னீர் இலையின் உள்ளே முருகனின் விபூதிப் பிரசாதத்தை இரவில் மடித்து மடித்து வைத்துவிட்டுக் காலையில் குளித்து அந்த விபூதியை அணிந்தும் பன்னீர் இலையின் ஒரு பகுதியை உண்டும் வந்தால் தீராத பிணிகள் தீரும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. செந்தில் ஆண்டவருக்கு இரண்டு திருவிழாக்கள் வருஷம்தோறும் ஆவணி, மாசி மாதங்களில் நடைபெறுகின்றன. இவை தவிர நித்யோத்சவம், வாரோத்சவம், பட்சோத்ஷவம், மாதோத்சவம், அயனோத்சவம், வசந்தோத்சவம், பிரம்மோத்சவம், வருஷோத்சவம், விரதோத்சவம், பவித்ரோசவம் ஆகியவை தின-வார பட்சங்களில் (15 நாட்கள்) -மாதங்களில் நடைபெறும் விழாக்கள் ஆகும்.

திருச்செந்தூกขல் ஐப்பசி மாத அமாவாசை அன்று மாலையில் இருந்து ஆறு நாட்கள் தொடர்ந்து விரதம் அதுவும் முருகன் காலடியான கோயிலைவிட்டு அகலாமல் தத்தம் விருப்பம் சக்திக்கேற்ப நோய்தீர, குறைதீர முறைப்படி இருந்துவந்தால் இடர் அகலும், துயர் தீரும் வாழ்வில் வளமும் நலமும் பெறுவர் என்று பயன் அடைந்தவர்கள் கூறுகிறார்கள். வெற்றிக்கும் வீரத்திற்கும் வழித்துணைக்கும் வெற்றிவேல் வீரவேல் அது கந்தவேலின் கைவேல்! ஓராறு முகமும் ஈராறு கைகளும் யாமிருக்கப் பயமேன் என்று நாடிவரும் அடியார்க்கு அருள்வன அல்லவா!