THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

           



தென்காசி கோவில்

 

தென்காசி, திருநெல்வேலியிலிருந்து மேற்குத் திசையில் சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது. விருது நகர் மார்க்கமாகவும் இரயிலில் சென்றடையலாம். தென்காசி ஆலயத்தில் இறைவன் விஸ்வநாதர் என்ற திருப்பெயரிலும் இறைவி உலகம்மன் என்ற திருப்பெயரிலும் அருள்பாலிக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலைக் கட்டிய அரசன் பராக்கிரம பாண்டியன். இவனது காலம் கி.பி.1422-1463. பராக்கிரம பாண்டியன் ஆலயத்தைக் கட்டியதும் நிற்கவில்லை. ஏராளமான ஊர்களையும் மானியங்கங்களாக அளித்துக் கட்டளைகளை ஏற்படுத்தி பூசைகள் விழாக்கள் நடைபெறும்படி செய்ததோடும் நிற்கவில்லை. இவன் கோயிலில் பொறித்துள்ள கல்வெட்டு ஒன்றில் அரிய செய்தியைத் தனது வேண்டுகோளாக செதுக்கியிருக்கிறான். இம்மன்னன் மற்றவரினும் வித்தியாசமான மன்னன் தான்.
      
கட்டுவது எளிது. ஆனால் தொடர்ந்து பராமரிப்பது தான் அரிது. எனவே வருங்கால சந்ததியினரை இந்த ஆலயத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டுள்ளது மட்டுமின்றி அப்படிப் பராமரிக்கும் சந்ததியினருக்குத் தனது வணக்கத்தைக் காணிக்கையாக்கி, விழுந்து வணங்குவதாகவும் பாடல் ஒன்றின் மூலம் கல்வெட்டில் குறித்து வைத்துள்ளான்.தென்காசி விஷ்வநாதர் கோயிலைக் கட்டி முடிக்க ஆறு ஆண்டுகள் பிடித்து உள்ளன. தனது ராஜ்ஜியத்தின் வருமானங்கள் அனைதையும் இந்தக் கோயிலை கட்டுவதற்குச் செலவழித்துள்ளான். பராக்கிரம பாண்டியன் தனது மனைவியுடன் வடக்கே காசிக்குச் சென்று விஸ்வநாதரைத் தரிசித்துவிட்டு வரும் வழியில் மதுரைக்கு வந்து அப்பன் சொக்கலிங்கத்தை தரிசித்துத் திரும்புகிறான். அன்று மன்னனின் கனவில் தெற்கே ஒரு காசியைக் காணவும் என்று கட்டளையிட மன்னனும் இறைவனின் கட்டளையை ஏற்று எப்படி நிர்மாணிப்பது என்று திகைத்திருந்த வேளையில், எறும்புக் கூட்டம் ஒன்று வழிகாட்ட, அதாவது சரம்சரமாக தன் கண் முன் எறும்புக்கூட்டம் ஊர்ந்து செல்வதைக் கவனித்து அவை தனக்கு வழிக்காட்டுவதாக எண்ணி அவற்றைத் தொடர்ந்து சென்றபோது சிறிய ஆறு ஒன்றின் கரையில் லிங்கம் ஒன்று நந்தியுடன் இருந்ததைக் கண்டு, தனக்குக் காசியில் உள்ள விஸ்வநாதரையே இறைவன் அடையாளம் காட்டியதாகக் கருதிக் கோயில் அமைத்தான்.