THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

            




ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

 

தல வரலாறு

இறைவனாகிய, அரங்கனையே மனதில் வா¢த்துக் காதலாகிக் கசிந்துருகி அந்தப் பரந்தாமனையே தனது பாசுரங்களால் பாடி மகிழ்ந்து மணந்து கொண்ட ஆண்டாள் அவதாரித்த தலம் ஸ்ரீவில்லிப்புத்தூர். விஷ்ணுசித்தர் என்ற வைஷ்ணவ பக்தர் தினமும் பெருமாளுக்குத் துளசி மாலை, வேறு சில மலர் மாலைகள் கட்டி அணிவித்து வந்தார். மலர் வனத்தில் ஒரு நாள் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அதனை எடுத்து வந்து தன் மனைவி விரஜையிடம் தந்து, அதற்குக் கோதை என்று பெயரிட்டுப் பாசத்துடன் வளர்த்து வந்தார். தினமும் இவர் பெருமாளுக்குக் கட்டி வைத்த மாலையைக் குழந்தை கோதை தன் கழுத்தில் முதலில் சூட்டி அழகு பார்த்துவிட்டுப் பின்னர் எடுத்து வைத்து விடுவாள். இதனை அறியாத விஷ்ணுசித்தர் அதனையே பெருமாளுக்குத் தினமும் அணிவித்து வந்தார். ஒரு நாள் கோதை, பெருமாளுக்கு என்றுதான் கட்டி வைத்த மாலையை அணிந்து அழகு பார்ப்பதைப் பார்த்துவிட்ட விஷ்ணுசித்தர் கோபம் கொண்டார். அன்று அந்த மாலையை பெருமாளுக்கு அணிவிக்கவில்லை. அன்று இரவு விஷ்ணுசித்தாரின் கனவில் பெருமாள் வந்து கோதை சூடிக் கொடுக்கும் மாலைகளே தனக்குப் பிடித்தவை; அவளே தன் ஆண்டாள் என்று கூறுகிறார். விஷ்ணுசித்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

கோதையும் வளர்ந்து பருவம் அடைந்தாள். மாயவனையே மணப்பெண் என்றும் உறுதியாக இருந்தாள். பெருமாள்மீது பாமாலையும் பாடினாள். பூமாலையும் சூட்டினாள். தன் மணாளனாக வாரித்தும் மகிழ்ந்தாள். விஷ்ணுசித்தரே பொரியாழ்வார் ஆவார். திருமால் மீது பாசுரங்கள் பாடி வந்தவர் தன் மகளின் போக்கு கண்டு மிகவும் ஆடிப்போன நிலையில், மத்தளம் கொட்ட வா¢சங்கம் நின்றூத முத்துடைத்தாமம் முறை தாழ்ந்த பந்தற்கீழ், மைந்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றி மாலை சூட்டத்தான் கனாக்கண்டது பற்றிச் சொன்னதைக் கேட்டதும் திகைத்து நின்ற விஷ்ணுசித்தராம் பொரியாழ்வாரின் கனவில் அரங்க நாதர் கோதையை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்து வரும்படியும் அங்கே, தான் மணப்பதாகவும் கூறி மறைகிறார். பொ¢யாழ்வாரும் அவ்வாறே கோதையை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துச் செல்ல, சூடிக் கொடுத்த சுடர்க்கொடி கோதை நாச்சியாரும் அரங்கனின் பாதார விந்தங்களில் தன்னை ஒப்புவித்து மகிழும் வேளையில் கோதையைப் பலர் முன்னிலையில் அவள் ஜென்ம பூமியான ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விண்ணப்பிக்க அப்படியே ஆகட்டும் என்று அரங்கனும் கருடாழ்வார்மீது கோதையுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்து பங்குனி உத்திரம் அன்று மணம்பு¡¢ந்து கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலேயே கோயிலும் கொண்டு விடுகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பிரசித்தி பெற்றதாகும். அதாவது கயிலைச் சென்று கயிலை நாதனைக் கையோடு அழைத்து வந்து மணந்து கொண்டு தன்னோடு இருத்திக்கொண்டு தானாட்சி செய்துவரும் அன்னை மீனாட்சி போல, ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசோச்சுகிறாள். பொரியாழ்வார் ஆண்டாள் வாழ்ந்த காலம் கி.பி.8ம் நூற்றாண்டு என்று வரலாறு கூறுகிறது.