THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 



ஸ்ரீவைகுண்டம் - கள்ளபிரான் கோவில்

 


திருநெல்வேலிக்கு கிழக்கே 27 கி.மீ தொலைவில் உள்ளது ஸ்ரீவைகுண்டம். திருநெல்வேலி, திருச்செந்தூர் ரயில் மார்க்கத்தில் உள்ளது ஸ்ரீவைகுண்டம். தாமிரவருணி ஆற்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் கள்ளபிரான் ஆலயத்தை அடையலாம். இந்த ஆலயத்தின் கோபுரம் 10 அடி உயரம் கொண்டது. நீளம் 580 அடியும், அகலம் 396 அடியும் பரப்பளவு கொண்டது. பெரியதொரு ஆலயம். ஆலய வாசலைக் கடந்து கொடிமரம், மண்டபம் இடையில் கோபுர வாசல், கருட மண்டபம், மணி மண்டபம், அர்த்த மண்டபம் இதில் கள்ளபிரான் கையில் கதாயுதத்துடன் நிற்கிறார். இந்த அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால் கருவறை. கருவறையில் வைகுண்ட நாதர் சிலை வடிவமாக நிற்கிறார். வானத்தில் மாடுகள் மேய்த்து வருபவர்கள் தினமும் ஆச்சரியமான நிகழ்ச்சியைப் பார்த்து வந்தனர். தாங்கள் மேய்க்கும் மாடுகள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றதும் அந்த இடத்தில் அவை தாமாகவே பால் சொரிவதைப் பார்த்து வர, இதனை மன்னனிடம் அவர்கள் சொல்ல, மன்னன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்க அங்கே சிலை ஒன்றைக் கண்டு வெளியே கொண்டுவந்து கோயில்கட்டியிருக்கிறான். வைகுண்டநாதன் என்று அழைக்கப்பட்டிருக்கிறார். புராண வரலாறும் உண்டு.

கோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்மாவிடமிருந்து நான்கு வேதங்களைப் பறித்துச் செல்ல, பிரம்மா உடனே வைகுண்ட நாதனை வேண்டி தவம் செய்ய, தவத்திற்கு இரங்கி, வைகுண்டவாசன் கருடன்மீது ஏறி வந்து கோமுகாரனுடன் போர் புரிந்து அவனைக் கொன்று வேதங்களை மீட்டுப் பிரம்மனிடம் ஒப்படைத்து இங்கே பூமியில் எழுந்தருளினார் என்று புராணம் கூறுகிறது. வைகுண்ட நாதன் பூமிக்குள் புதைந்து இருந்தபோது பசுக்கள் பால் சொரிந்தால் தினமும் பாலையே திருமஞ்சசனமாகச் செய்கிறார்கள். அதனால் பால்பாண்டியன் என்று சிறப்புப் பெயரிட்டுக் கூறுகிறார்கள். வருஷந்தோறும் இந்தத்தலத்தில் ஓர் அதிசயம் நடைபெறுகிறது. சித்திரை மாதம் ஆறாம் தேதியும் ஐப்பசி மாதம் ஆறாம் தேதியும் சூரியனின் கிரணங்கள் காலையில் கோயில் கோபுரம் மண்டபம் இவற்றைக் கடந்து இந்த வைகுண்ட நாதன் மேல் பட்டுத் தகதகவெனப் பொன்னாக இம்மேனியனை ஜொலிக்க வைக்கிறது. இது காண்பதற்கு அரிய காட்சியாகும்.

வெளியே வைகுண்ட நாயகி, சோர நாத நாயகி தனித்தனி சந்நிதியில் உள்ளனர். அடுத்து பரமபத வாசல் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் வாசல். பக்கத்தில் மணவாள மாமுனிகள் சந்நிதி. தசவதாரக் காட்சி சிலை வடிவில் காணலாம்.