THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 



ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்

 



 

 திருவானைக்காவிலிருந்து ஸ்ரீரங்கம் 2 கி.மீ தூரத்தில் திருச்சியில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும் உள்ளது. காவிரியும் கொள்ளிடமும் மாலையாகவும் அந்த மாலையைச் சூடியதுபோன்று ஸ்ரீரங்கமும் அமைந்துள்ளது. பழம்பெரும் வைணவத்தலம் எனப் பெருமை பெற்றுத் திகழ்கிறது இந்த ஸ்ரீரங்கம்! இந்து சமயவரலாற்றில் கி.பி.7ம் நூற்றாண்டு முதல் கி.பி.13ம் நூற்றாண்டு வரை வைணவம் அரசோச்சியபோது அதன் தலைமை இடமாக இந்த ஸ்ரீரங்கம் திகழ்ந்தது. இந்திய நாட்டின் உள்ள மிகப் பெரிய வைணவ ஆலயங்களில் மிகச் சிறந்தது என்றும் மிகப் புனிதம் கொண்டது என்றும் இந்த ஸ்ரீரங்கம் மதிக்கப்படுகிறது.
சிலப்பதிகாரம், நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றில் ஸ்ரீரங்கம் பாடப் பெற்றுள்ளது. முதன் முதலில் சோழமன்னன் தர்மவர்மன் என்பவரால் இக்கோயில் உருவாக்கப்பட்டது என்றும் அது காலப்போக்கில் நதியால் அதன் வெள்ளத்தால் மூழ்கப்பெற்றது என்றும் பின்னர் அடுத்து வந்த சோழ மன்னர் ஒருவர் இதனை அகழ்ந்து எடுத்தார் என்றும் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வரால் மேலும் விரி வு படுத்தப்பட்டது என்றும் அறிகிறோம்.

சோழ மன்னர்கள் ஏராளமாகச் சாசனங்களை வழங்கியுள்ளனர் என்று 400 கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. ராஜமகேந்திரச் சோழன் முதல் பிராகாரத்தில் எழுப்பியுள்ள மதில் ராஜ மகேந்திர வீதி என்று வழங்கப்பெறுகிறது.
13ம் நூற்றாண்டில் மைசூர் ஹொய்சாள மன்னர்களின் ஆட்சியில் ஸ்ரீரங்கம் வந்த பின்னர் இக்கோயிலின் பெரும் பகுதிகள் கட்டப்பட்டன. 14ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஹொய்சாளர்களை விரட்டினான். விஜய நகர அரசர்கள் நாயக்க மன்னர்கள் அகியோர்களும் 15-16ம் நூற்றாண்டில் இக்கோயிலுக்கு ஏராளமான அளவில் திருப்பணி செய்துள்ளனர்.17ம் நூற்றாண்டில் ஹைதர் அலி- திப்புசுல்தான் ஆகியோரின் படை எடுப்பிற்கும் இந்த ஸ்ரீரங்கம் இலக்கானது.
18ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வசம் வந்தபோது இக்கோயிலின் விலைமதிப்பற்ற நவரத்தினங்களைக் கவர்ந்து சென்றனர் என்றும் ரஷ்ய ஜார் மன்னன் மகுடத்தை ஸ்ரீரங்கம் ரங்க நாதாரின் விலையே மதிக்க முடியாத வைரக்கற்கள் அலங்கா¢த்தன என்றும் வரலாறு கூறுகிறது

இந்தத் தலத்தில் இருக்கும் 21 கோபுரங்களில் முக்கியமாகக் குறிப்பிடும் கோபுரங்கள் இரண்டு. அவை வெள்ளைக் கோபுரம், நான்முகன் கோபுரம். இந்த நான்முகன் கோபுர வாசல் வழியே அதாவது தென் திசை நோக்கியபடி சயனித்து இருக்கும் ரங்கனைத் தரி சிக்க இந்த தென் வாசலின் வழி செல்ல வேண்டும். ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்ட பெருமாளைப் பக்த்தர்கள் ஒருவழிப் பாதைப்போல கால் பக்கமிருந்துதான் வா¢சையில் நின்று சேவிக்கிறார்கள். தலைமாட்டுப் பக்கத்தைத் துரியோதனன் பக்கம் என்று ஒதுக்கி விடுகிறார்கள். இந்தத் தலைமாட்டுப் பக்கம் யாரும் வராமல் இருக்க இதற்கான வழி அடைத்தே இருக்கிறது. ரங்க மண்டபம், நாலுகால் மண்டபம், கார்த்திகை மண்டபம் இவற்றைக் கடந்து கருவறை வர வேண்டும். கருவறையின் மேலே உள்ள விமானமே அன் நாளில் விபீஷணன் கொணர்ந்தது. இதற்குப் பொன்னால் கூரை வேய்ந்துள்ளனர்.

ஸ்ரீரங்கத்து ரங்க நாதனை ஆழ்வார்கள் அனைவருமே போற்றிப் பாடியுள்ளனர். இந்த ஆலயத்தில் ரங்க நாதனுக்கு நிவேதனம் செய்ய தினமும் உருவாக்கப்படும் மண்பாண்டங்களில் மட்டுமே பிரசாதங்கள் செய்யப்படுகின்றன என்றும் அப்படி பிரசாதம் செய்துமுடிக்கப்பட்டதும் அவைகள் அந்த மண்பாண்டங்கள் அடுத்து உபயோகப்படுத்தப்படுவது இல்லை என்றும் கூறுகிறார்கள். யுனெஸ்கோ எனப்படும் ஐ.நா கல்வி கலாச்சாரப் பண்பாட்டுக்கழகம் இந்தச் சா¢த்திரப் பிரசித்தி பெற்ற பழம் பெரும் வாய்ந்த கோயிலுக்கு அதன் புகழையும் பெருமையையும் காக்கும் வகையில் பல லட்ச ரூபாய் அளித்து உதவி செய்து வருகிறது.
எங்குச் சுற்றியும் ரங்கனை சேவி என்பதற்கேற்ப ஸ்ரீரங்கம் ரங்க நாதரை சேவிப்பவர்க்கு வாழ்வில் சேஷமமும் சொர்க்கத்தில் இடமும் நிச்சயம் உண்டு.