THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 




பரராஜசேகரப் பிள்ளையார் கோவில்

 

தல வரலாறு
 

வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப்

பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க

ஞான மதம் ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்

ஆனை முகனைப் பரவி அஞ்சலி செய்வோம்.

     யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப்பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும்,வைதீகத்திருவுருவம் மிக்க இணுழவயம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றான்.

ஏம்பெருமான் கோயில் கொண்ட வரலாற்றைக்கூறுவதில் நாம் பெருமை அடைகின்றோம். இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு(6) நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியது.மேலும் அரசபரம்பரையோடு தொடர்புடைய பெருமையுடையது.யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான 'பரராஜசேகரன்'  என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது.14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் இவ்வாலயத்தை கட்டினாhன். இதனால் இவ்வாலயத்திற்குப் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என்னும் திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது.

கோயிலின் அமைவிடம்

யாழ்ப்பாணத்திலிருந்து இணுவில் நான்காவது மைல் தூரத்தில் உள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை வீதி இணுவிலை இரு பகுதிகளாக ஊடறுத்து தெற்கு வடக்காக  செல்கின்றது. இவ்வீதியை கிழக்கு மேற்காக மானிப்பாய் வீதி வந்து தொடுகின்றது. இவ்வீதியானது கே.கே.எஸ் வீதியைத் தொட்டு மேற்கே இணுவில் கந்தசாமி கோயில் வரை சென்று திரும்பிப் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாக சென்று மருதடி விநாயகர் ஆலய வீதியைத் தொடுகின்றது. இணுவில் முருகன் ஆலயத்திற்கும் பரராஜசேகரப்பிள்ளையார் ஆலயத்திற்கும் இடைத்தூரம் நூறுயார் வரை இருக்கும். வீதியின் தெற்கே பரராஜசேகரர் ஆலயம் என்றால் வடக்கே இப்போது இந்துக்கல்லூரி என அழைக்கப்படும் சைவப்பிகாச வித்தியாசாலை அமைந்துள்ளது.இவ்வீதியின்; இருமருங்கும் ஆலயத்திருப்பணிக்கு உதவுவோர் இருக்கின்றனர். புpராமணய்குடும்பங்கள், பிரசித்துபெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்கள் குடும்பங்கள், பூமாலை, சப்பரம்,காவடி தந்துதவுவோர் குடும்பங்கள் கூடியமர்ந்துள்ளனர்.இணுவில் ஓர் அழகிய கிராமம். இருபதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் அழகு செய்ய நடுநாயகமாகப் பரராஜசேகரப்பெருமான்; அருள்பாலிக்க சித்தர்களும், பக்தர்களும், கலைகளும்,கலைஞர்களும், வாழுகின்ற திருவூராக விளங்குகின்றது. அந்நியர் ஆதிக்கத்தின் கொடிய தாக்குதலுக்கு எதிர்நின்றும் போராடியும் சைவத்தை காத்து வேற்றுச்சமயம் ஒன்றேனும் உட்பகுந்து சைவத்தைச் சிதைத்து விடாது காத்து நின்ற ஓரே ஊhர் இணுவையம்பதி என்ற பெருமைக்குரியது.

விநாயக வழிபாடு ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தில் முதலிடம் பெற்றது.இந்த வகையில் செகராஜசேகரப்பிய்iயார்,கருணாகரப்பிள்ளையார்,
வெயிலுகந்தப்பிள்iயார்,
பறாளை விநாயகர் போன்ற பல விநாயகர் ஆலயங்கள் இக்காலத்தில் எழுந்தன. விநாயகர் வணக்கம் முதன்மை பெற்றது. விநாயகன் என்பதன் பொருள் தனக்கு மேலொரு தலைவன் இல்லாதவன் என்பதாகும். மேலும் எமக்கு வரும் விக்கினங்களை தீர்ப்பவன் என்றும்,அல்லாதோருக்கு விக்கியங்களைத்தருபவர் என்றும் கூறுவர். நாம் எக்கருமங்களைச்செய்யினும் அது விக்கினங்கள் இன்றி நிறைவேறுவதற்கு விநாயகரை வழிபடுகின்றோம். புரராஜசேகரப்பிள்ளையாரின் திருவுருவம் தென்னிந்தியச் சிற்பிகளால் செதுக்கப்பட்டு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தது என்பர். கருவறையில் இருக்கும் இவ்விநாகப்பெருமான் தனது வலக்கரத்தில் அங்குசத்தையும், இடக்கரத்தில் பாசத்தையும், கீழேயுள்ள வலக்கரத்தில் ஒடிந்த தந்தத்தையும், இடக்கரத்தில் மோதகத்தையும் தும்பிக்கையில் கும்பத்தையும் வைத்திருக்கின்றார். மேலும் சுளகு போன்ற இருசெவிகளும் பெரிய வயி;ற்றையும் உடையவராகவும் இடது பாதத்தை மடித்தும் வலது பாதத்தை தொங்கவிட்டபடி காடசிதருகின்றார். இத்தோற்றமானது ஆன்மாக்களின் வினைகளைப்போக்கி பேரின்பத்தை நல்குவதாகவும் அமைந்துள்ளது.விநாயகப் பெருமானுக்கு கணபதி,லம்போதரன்,விக்கினராஜன்,ஆனைமுகன் எனப் பல திருநாமங்கள் உண்டு. கணங்களுக்கு அத்பதியாகையால் கணபதியெனவும், விக்கினங்களைத்தீர்ப்பதனால் விக்கிகேஸ்வரன் என்றும்,பானை வயிறு உடையதனால் லம்போதரன் என்றும், ஒற்றைக்கொம்பையுடையதனால் ஏகதந்தன் என்றும் பெயர்கள் உள்ளன.

மேலும் இவ்வாலயத்திருப்பணி வேலைகளை இவ்வூர்ப்பிரமுகர்களும், அடியவர்களும் சேர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாலயம் கருவறை, அர்த்த மண்டபம்,மகா மண்டபம்,சபா மண்டபம்,ஸ்தம்ப மண்பம்,வசந்த மண்டபம்,யாக சாலை, பாக சாலை, வாகன சாலை,மணி மண்டபம், மணிக்கூட்டு வைரவர் ஆலயம் என்ற வகையில் அமைந்துள்ளது.

இவ்வாலயம் சிறந்தோங்க ஊர்த் தொண்டர்களும், இளைஞர்களும், வர்த்தகப் பெருமக்களும் உதவியுள்ளனர். அவர்தம் பெயர்கள் யாவற்றையும்  எண்ணிக்கணக்கிட முடியாத வகையில் முன்னின்று கருமங்களை ஆற்றியுள்ளனர்.