THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 


பூஜ்ய ஸ்ரீஓங்காராநந்த சுவாமிகள்

 

 

          ஆசரம முகவரி

          ஸ்ரீசுவாமி சித்பவானந்த ஆச்ரமம்
          த.பெ.எண்.23, சத்திரப்பட்டி சாலை,
          வேதபுரீ, தேனி - 625 531
          தொலைபேசி எண் : +91-4546-253908
          Website : www.vedaneri.com
          email :
swamiomkarananda@yahoo.com/gmail.com

பூஜ்ய ஸ்ரீஓங்காராநந்த சுவாமிகளைப் பற்றி.....

பாரதபூமியின் தத்துவ ஞானத்திற்கும் தார்மீக வாழ்க்கைகும் புத்துணர்வு தருபவர் பூஜ்ய ஸ்ரீஓங்காரானந்த சுவாமிகள்.
பாரதப் பண்பாட்டில் ஆழ்ந்து ஊறிய குடும்பத்தில் தோன்றியவர். இளம் வயதிலிருந்தே வேத நெறி வாழ்க்கையை முறையாகக் கற்று கடைப்பிடித்து வருபவர்.
திருப்பராய்த்துரை, ஸ்ரீராமக்ருஷ்ணா தபோவந நிறுவனர், தெய்விகப் பண்புச் செல்வர் பரமபூஜ்ய ஸ்ரீசுவாமி சித்பவாநந்தர் அவர்களிடம் ஸந்யாஸதீiக்ஷ பெற்றவர்.
ஜகத்குரு பரம பூஜ்ய ஸ்ரீசுவாமி தயா நந்தர் அவர்களின் மிகச் சிறந்த மாணவர்களில் ஒருவரான பரமபூஜ்ய ஸ்ரீசுவாமி பரமார்த்தா நந்தர் அவர்களிடம் வேதாந்தம் பயின்றவர்.
ஸ்ரீமத் பகவத்கீதையிலும் உப நிஷதங்களிலும் ஆழ்ந்திருக்கும் உண்மைக் கருத்துக்களை, பாமரருக்கும் கொண்டுசேர்க்கும் சொற்பொழிவு நயம்மிக்கவர்.
தேவாரம், திருவாசகம், திருமந்திரம், தாயுமானவர் பாடல்கள் போன்ற தெய்வத்தமிழ் சமய இலக்கியங்கள், பாரதியார் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறளுக்கு முதன்மை தந்து அதன் உட்பொருளை ஆழ்ந்து விளக்கி வருபவர்.
ஸ்ரீதக்ஷிணா மூர்த்தி ஸேவா ஸமிதி என்ற அமைப்பின் வாயிலாக தேனி, வேதபுரி ஆச்ரமத்தில், ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீடத்தை மிகச் சிறப்பாக உருவாக்கி நடத்தி வருபவர். 
தத்தாத்ரேயர் பரம்பரையில் வரும், புதுக்கோட்டை, ஸ்ரீபுவனேச்வரீ அவதூத வித்யாபீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீசாந்தா நந்த மஹாஸ்வாமிகளுக்கு அடுத்து அப்பீடத்தை அலங்கரித்து வருபவர்.
சென்னையில், ஸத்குரு சாந்தாநந்த ஸத்ஸங்கம் ட்ரஸ்ட் என்ற அமைப்பை நிறுவி, அதன் வாயிலாகவும் அறப்பணிகள் ஆற்றிவருபவர்.
படித்தவர் பாமரர் பேதமின்றி, ஜாதி மத பேதமின்றி, வயது பேதமின்றி, ஏழை பணக்காரர் பேதமின்றி அனைத்துத்தர மக்களையும் தனது பழகும் தன்மையாலும் அருளுரைகளாலும் கவர்ந்து ஈர்க்கும் பண்பாளர்.
இவர்களால் ஈர்க்கப்பட்ட அனைவரும், ஆன்மீக வாழ்வில் வேரூன்றி நின்று அன்பும் அறமும் பூத்துக்குலுங்கி அமைதி கனிந்த பயனுடைய தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் என்றால் அது மிகையல்ல.
வேதாந்த சாஸ்த்ர ப்ரசார ட்ரஸ்ட், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸேவா ஸமிதி ஆகிய இரண்டு அறக்கட்டளைகளை அமைத்து, அவற்றின் வாயிலாக அரும்பணிகள் ஆற்றி வருபவர்.
வேதாந்த சாஷ்த்ர ப்ரசார ட்ரஸ்ட் என்ற அமைப்பின் வாயிலாக தேனி நகர், முல்லையாற்றங்கரையில் வேதபுரி எனும் தலத்தை உருவாக்கி அங்கு ஸ்ரீ ஸ்வாமீ சித்பவானந்த ஆச்ரமத்தை நிறுவியவர்.