THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

           



ராமேஸ்வரம் கோயில்

 



 

தமிழ் நாட்டின் தெற்குப் பகுதியில் பழமைக்கும் புதுமைக்கும் பெருமை சேர்க்கும் விதமாக வரலாற்று நிகழ்ச்சிகளைப் பறைசாற்றிக் கொண்டு இருக்கும் தலமாகத் திகழ்கிறது ராமேஸ்வரம். மதுரையிலிருந்து 169 கி.மீ தூரத்தில் ராமேஸ்வரம் உள்ளாது. இது ராம நாத புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறியதொரு தீவு. இந்த சிறிய தீவு, காக்கும் கடவுளாகிய மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் வலம்புரி ச்சங்கின் தோற்றத்தின் சாயல் கொண்டது என்று கூறலாம்.
ஸ்ரீராமன் பிரதிஷ்டை செய்த லிங்கம் ராமலிங்கம் ஆகும். இலங்கையில் ராவணணை வதம் செய்த பின்னர் தனக்கு அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்க இறைவனைப் பிரார்த்தித போது, லிங்கத்தைப் பிரதிஷ்டைசெய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என்று அறிந்து அதன்படி பிரதிஷ்டை செய்ய முற்பட்டார்.

உடனிருந்த அனுமானை நர்மதை நதி தீரத்திற்கு அனுப்பி அங்கிருந்து லிங்கம் அமைக்கக் கல் கொணரும்படி பணிக்க, அனுமன் விரைந்து பறந்து சென்றான். குறிப்பிட்ட நேரத்திற்குள் அனுமனால் திரும்ப முடியவில்லை. தான் பிரதிஷ்டை செய்ய வேண்டிய நேரம் நெருங்க நெருங்க ஸ்ரீராமபிரானுக்குச் சீதாபிராட்டியார் தனது திருக்கரத்தாலேயே மணலிலேயே சிவலிங்கத்தை உருவாக்கி அண்ணலிடம் தர,அதனையே பிரதிஷ்டை செய்துத் துதித்துத் தன் பூஜையை முடித்துக் கொண்ட நேரத்தில் அனுமன் சிவலிங்கம் ஒன்றுடன் திரும்பினான். தான் தாமதமாக வந்ததால் ஏற்கெனவே சிவலிங்கம் நிறுவப்பட்டு பூஜை முடிக்கப் பெற்றதை அறிந்து தனது ஆற்றாமையால் எழுந்த கோபத்தால் மணல் கொண்டு உருவாக்கப்பட்ட சிவலிங்கத்தைத் தன் வாலால் இழுத்து வீழ்த்திட முயல, முயற்சி தோல்வியைத்தான் கண்டது. மணல் தானே என்று இகழ்வாக எண்ணியது தவறு என்பதை உணர்ந்த அனுமன் தன்னால் அசைக்கமுடியாத சிவலிங்கம், சர்வேச்வரன் அருள் பெற்றது என்பதை உணர்ந்தான். எனினும் அனுமனின் உணர்வுகளுக்கு மதிப்புத் தந்து அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை ஏற்கனவே பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்து அனுமலிங்கம் என்று ராமர் பெயரிட்டார். இது விச்வ நாதர் என்றும் அழைக்கப்படும்.
சைவ வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக ராமேஸ்வரம் திகழ்கிறது. இங்குள்ள மூர்த்தி ராமநாதசுவாமி என்றும் அழைக்கப்படுகிறது.