 |

தல வரலாறு
தனக்கு பழம் கிடைக்கவில்லை என்பதற்காக தன் தாய் தந்தையோடு முருகபெருமான்
கோபித்துகொண்டு கோவணத்தோடு ஆண்டிகோலமாய் நின்ற திருத்தலம். ஆறுபடை வீடுகளிள் 3-வது
படைவீடு என்ற சிறப்பு பெற்றது. தினமும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. இடைவெளி இல்லாது
காலை 6.00 மணி முதல் இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்தே இருக்கும். விஷேச நாட்களில்
அதிகாலை 4 மணிக்கே நடை திறந்து ராக்கால பூஜை வரை திறந்து இருக்கிறது. தமிழ்
நாட்டிலேயே அதிக வருமானம் வரும் இத்திருக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான்
பெருமான் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் காலத்தில் திருப்பணிகள்
நடந்துள்ளன. புராண காலத்திலும், சங்க காலத்திலும் ஏராளமாக பாடபெற்ற சிறப்பு வாய்ந்த
திருத்தலம்.
பிரார்த்தனை
இத்தலத்தில் வேண்டும் அனைத்து
காரியங்களும் நிறைவேறுகின்றன. வேண்டுவோர்க்கு
வேண்டுவன நல்கியருளும் கடவுளாக தண்டாயுதபாணி திகழ்கிறார். திருமணம், குழந்தை
பாக்கியம், வியாபார விருத்தி, கல்வி பலமும், உடல் பலமும் கொடுக்கும் தெய்வமாக
திழ்கிறார். மனபலம், உடல்பலம் ஆகியவை தருபவராகவும், மனதுக்கு அமைதியும் தரும்
சிறப்பு பெற்றவராகவும் உள்ளார். இங்கு இறைவனை வணங்கினால் முக்தி கிடைக்கும் என்றும்
புராணங்கள் கூறுகின்றன.
தங்கரதம்
தங்கரதத்தினால் சுவாமி புறப்பாடு நடத்த வேண்டுமென்று கோரூவோர் மலைக்கோயிலில் கட்டணம்
ரூ.2000/- செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். அதுபோல தங்கமயில் வாகனப்
புறப்பாட்டிற்கு ரூ.1000/- செலுத்த வேண்டும். வெளியூரிலிருந்து பதிவு செய்துகொள்ளா
விரும்புவோர் "இணை ஆணையர்/நிர்வாக அதிகா¡¢, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி
திருக்கோயில், பழனி"
என்ற முகவா¢க்கு பாங்க் டிராப்ட் வாங்கி உ¡¢ய விவரத்தை 7
நாட்களுக்கு முன்பாக அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சூரசம் ஹாரம்,
நவராத்திரி (11 நாட்கள்) தீப கார்த்திகை (பரிய கார்த்திகை) தைப்பூசம், பங்குனி
உத்திரம் ஆகிய நாட்களில் தங்க ரதத்தில் சுவாமி புறப்பாடு இல்லை.
மலைக்கோயில் செல்ல மின் இழுவை ரயில்
(தொலைபேசி எண்: 242249)
பக்தர்கள் இறைவனை தா¢சிப்பதெற்கென்றே மலைமீது ஏற முதன் முதலில் மின் இழுவை ரயில்
விடப்பட்டது பழனியில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மின்சாரத்தின் உதவியால்
இயங்கும் இந்த இழுவை ரயில் வயது முதிந்தவர்களுக்கும், நடக்க இயலாதவர்களுக்கும், உடல்
நலன் இல்லாதவர்களுக்கும், குழந்தைகளுக்கும், மலைமீது சென்று ஆண்டவனை
தரிசித்து வர
மிகவும் வசதியாக இருக்கும். மூன்று மின் இழுவை ரயில்கள் இயங்குகின்றன. இந்த ரயில்கள்
எட்டு நிமிடங்களில் மலையின் உச்சியை சென்றடைந்து அங்கிருந்து புறப்பட்ட எட்டு
நிமிடங்களில் அடிவாரத்தை வந்தடைகின்றன. இந்த மின் இழுவை ரயில்கள் காலை 5.00 மணி
முதல் இரவு 9.00 மணி வரை இயங்குகின்றன. இந்த ரயில் பயணம் செய்ய
பெரியவர்களுக்கு தலா
ரூ.10/-ம், 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.5/-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மேலும் அனைத்து நாட்களிலும் மின் இழுவை ரயிலில் உடனடியாக மேலே பயணம் செய்ய
பெரியவர்கள்/சிறியவர்கள்
அனைவருக்கும் தலா ரூ.50/- சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுபோல் கீழே
உடனடியாக இறங்க தலா ரூ.25/- சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
கம்பி வட ஊர்தி
இன்றைய நவீன தொழில் நுட்பகாலத்தில் புதிய போக்குவரத்து சாதனங்கலைப் பயன்படுத்த
வேண்டிய தேவை ஏற்பட்டு வருகின்றது. பழனித் திருக்கோயில் நிர்வாகம் பக்தர்களின்
வசதிக்காகவும், பக்தர்கள் விரைவில் மலைக்கோவிலுக்குச் சென்று பழனி முருகனைத்
தரிசனம்
செய்வதற்கும் கம்பி வட ஊர்தித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. ரூபாய் நான்கு கோடி
செலவில், பக்தர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் மலைக்குச் செல்வதற்கு இத்திட்டம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெட்டியிலும் 4 பேர் வீதம் அமர்ந்து செல்லும்
வகையில் மொத்தம் 20 பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பி வட ஊர்தி மூலமாக ஒரு மணி
நேரத்திற்குள் 800 பக்தர்கள் மலைக்கோயிலுக்குச் செல்லலாம். அதே சமயத்தில் 800
பக்தர்கள் கீழே இறங்கலாம்.
கட்டண விபரம்
1.கீழ் தளத்திலிருந்து மலைக்கோயில் செல்வதற்கு நபர் 1-க்கு ரூ 15/- மட்டும். சிறப்பு
கட்டணம் ரூ.50/-
2.மலைக்கோயிலிருந்து கீழ் தளம் வருவதற்கு நபர் 1-க்கு ரூ 15/- மட்டும். சிறப்பு
கட்டணம் ரூ.50/-
மலைக்கோயில் திறந்திருக்கும் நேரம்
மலைக்கோயில் சந்நிதி சாதாரண நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
திறந்திருக்கும். கிருத்திகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் காலை 4 மணி முதல்
இரவு இராக்காலம் பூஜை முடியும் வரை திறந்திருக்கும். திருமணங்கள் நிகழ்த்த
அருள்மிகு பட்டத்து வினாயகர் கோயில் அருகில் சுமார் 20 லட்சம் மதிப்பில் நவீன
வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. திருமணம் நடத்த கட்டணமாக
ரூ.4000/- மற்றும் சேவை
வரி வசூலிக்கப்படுகிறது. பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு
யூனிட் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிவாரத்திலுள்ள
திருஆவினங்க்குடிக்கோயில் மற்றும் ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் கோயில்
ஆகியவற்றில் உரிய கட்டணத்தைச் செலுத்தி திருமணம் நடத்திகொள்ளலாம். மேற்படி
கோயிலுக்கு சொந்தமான ஒட்டன்சத்திரதிலுள்ள ராம்கோ மண்டபத்தில் திருமணம் போன்ற விசேஷ
நிகழ்ச்சிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2000/- மற்றும் மின்சார கட்டணம்தனியாக
வசூலிக்கப்படுகிறது. மலைக்கோயிலில் திருமணங்கள் செய்யப்படுவதில்லை.
காவடி மண்டபம் 1 பகுதிக்கு ரூ.420/- ஆகும்.
Daily 6 Poojas will be held.
|
POOJA |
TIME |
| Vishvaruba
Dharsanam |
5.40 A.M |
| Vila pooja |
6.50 A.M |
| Sirukala
Shanthi Pooja |
8.00 A.M |
| Kala Shanthi
Pooja |
9.00 A.M |
| Uchi Kaala
Pooja (noon pooja) |
12.00 NOON |
| Sayaraksha
(Evening) Pooja |
5.30 P.M |
| Raakaala
Pooja |
8.00 P.M |
| |
|
|
 |