THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 


நித்யானந்த தியான பீடம்

 

தங்கள் கனவுகளையெல்லாம் நிஜமாக்கும் சக்தி

நிஜமாய் தோன்றும் இந்த உலகமே சாதாரண கனவுதான் என்று உணரும் புத்தி

மேற்சொன்ன இரண்டையும் தாண்டிய முக்தி ஆகிய அனைத்தையும் தரும் தரிசனம் கல்பதரு தரிசனம்

இது ஒரு நாள் அனுபவ முகாம்

வாழும் ஞானியாம் பரமஹம்ஷர் நித்யானந்தர் தரும் இந்த கல்பதரு தரிசனம் பிடதி ஆஸ்ரமத்தில் பிரதி சனி ஞாயிறு நடைபெறுகின்றது.

கல்பதரு தரிசனம் பெறவாருங்கள்
 

                                                                                              - பரமஹம்ஷர் நித்யானந்தர்


முகவரி

நித்யானந்த தியானபீடம்
கல்லுஹோபஹல்லி, மைசூர் ரோடு,
பிடதி, பெங்களூர்,
கர்நாடகா.

ஆனந்தமான செய்தி

கலியுகத்தை காப்பாற்றிட...கலியுக கல்கியாக மாறுங்கள். நீங்கள் வாழ்கின்ற உலகை உங்களால்தான் காப்பாற்ற முடியும்! கதவை திற காற்று வரட்டும் எனும் தியான சத்சங்கத்தில் தியான அன்பர் ஒருவர் "சாமி கலி முற்றி விட்டது" என்று பெரும்பாலோர் சொல்கிறார்கள். பழம் முற்றிவிட்டால் மரத்திலிருக்கும் பழம் தானே விழுந்துவிடும். விழாமல் இருக்கிறது என்றால், கனி முற்றவில்லை என்று பொருள். மரத்தில் இருக்கும் கனிபோன்று கலியும் எப்படியும் முற்றத்தான் வேண்டும். கலி முற்றாமல் இருக்கும் வழியை அனைவருக்கும் சொல்லக் கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டார்...

ஐயா, மிக அழகான கேள்வியை கேட்டிருந்தார். "கலி முற்றிவிட்டது என்பதைத்தான் collective negativity அதிகமாகிவிட்டது என்று சொல்கின்றோமோ?." என்று மிகவும் அருமையாக கேட்டிருந்தார். மிகவும் பயனுள்ள கேள்வி. இந்த ஒரு கேள்வியை ஆழ்ந்து ஆராய்ந்தாலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் நிலைமை புரிந்துவிடும். நம் எல்லோருடைய நல்ல எண்ணங்களும், ஒன்று சேர்ந்தால் ஒரு நல்ல வெளிப்பாடும் (positive explosion), நம் எல்லோருடைய கெட்ட எண்ணங்களும், ஒன்று சேரும்பொழுது எதிர்மறை வெளிபாடும் (negative explosion) நடக்கும். என்னிடம் பக்தர் ஒருவர், "சுவாமி ! மிகப்பெரும் கொடுமைக்காரர்களாகிய ஹிட்லர், இப்போது பின்லேடன் போன்றவர்கள் எல்லாம் உருவாகிக் கொண்டே இருக்காங்களே? இதெல்லாம் எப்படி தடுத்து நிறுத்துவது?" என்று கேட்டார். அவர்களிடம் சொன்ன ஒரே விஷயம் : தயவு செய்து ஹிட்லரையோ, பின்லேடனையோ குறை சொல்லாதீர்கள். நாம் எல்லாருமே ஒரு ஹிட்லர் உருவாகுவதற்கும், ஒரு சதாம் உசேன் உருவாதற்கும், ஒரு பின்லேடன் உருவாவதற்கும் நம்முடைய பங்கை அளித்திருக்கிறோம். மாலையில் ஆபீசில் இருந்து வீட்டிற்குள் நுழையும்போதே காலில் இருக்கும் ஷ¥வை கழற்றி வேகமாக எறிகின்றோம். நம் பக்கத்தில் இருக்கின்ற மனைவியையோ, மகனையோ, மருமகளையோ எறிஞ்சி விழுகிறோம். இந்த மாதிரியான நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் மொத்தமாக சேர்ந்தால் நம்முடைய collective negativity என்று சொல்லுவார்கள். அந்த எதிர்மறை வெளிப்பாடு தான் ஒரு பின்லேடனாகவோ, சதாம் உசேனாகவோ, ஹிட்லராகவோ வெளிப்படுகிறது. நாம் எல்லோரும் செய்கின்ற நல்ல விஷயங்கள் ஒன்றாக சேர்ந்துதான் புத்தராக வெளிப்படுகின்றது. நாம் எல்லோரும் செய்கின்ற எதிர்மறை விஷயங்கள் ஒன்றாக சேர்ந்து தான் ஒரு ஹிட்லராக வெளிப்படுகின்றது. ஹிட்லரையோ, சதாம் உசேனையோ நாம் தனிப்பட்ட விதத்தில் குறை சொல்ல முடியாது. நாம் ஒவ்வொருவரும் ஒரு ஹிட்லர் உருவாக நம்முடைய பங்களிப்பை அளித்துக் கொண்டே இருக்கிறோம்.

நம்முடைய மனதில் ஏற்படும் வஞ்சகங்களும், நம்முடைய மனதில் ஏற்படும் கோபங்களும், நம்முடைய மனதில் ஏற்படும் குரோதங்களும் நம் ஒவ்வொருவரின் பங்களிப்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சிறுதுளி பெரு வெள்ளமாக உருவாகிறது. நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பும் ஒன்றாக சேரும்பொழுது ஒரு ஹிட்லராக வெளிப்படுகிறது. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பங்களிப்பை நிறுத்துவது மட்டும் தான். நம்முடைய பங்களிப்பை அழிப்பது மட்டும்தான் கலி முற்றாமல் இருப்பதற்கான ஒரே வழியாக இருக்கமுடியும். சமுதாயப் புரட்சியோ, சமூகப் புரட்சியோ இதற்கு விடை சொல்ல முடியாது. தனி மனித புரட்சி மட்டும்தான் விடை சொல்ல முடியும். Never the social revolution, only the individual revolution will save the world.

பலர் என்னிடம் வந்து "சாமி, நான் இந்த உலகத்தையே நேசிக்கிறேன். உலகம் அத்தனைக்கும் என்னுடைய அன்பையும், கருணையையும் கொடுக்கிறேன்" என்று சொல்வார்கள். உலகத்தையே நேசிப்பது ரொம்ப சுலபம். பக்கத்து வீட்டுக்காரரை நேசிப்பதுதான் கஷ்டம். 'உலகத்தையே நேசிக்கிறேன்'  'உலகத்தையே நேசிக்கிறேன்'  'உலகத்தையே நேசிக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால் நாம் எப்போதும் செய்கின்ற வேலையை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கலாம். 'பக்கத்து வீட்டுக்காரரை நேசிக்கிறேன்' என்று சொல்லும்போது, நம்முடைய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டியிருக்கும். அவரைப் பார்த்ததும், நாம் ஒரு புன்னகை கொடுக்க வேண்டியதாகி இருக்கும். எப்போதும் வீசும் போலிஷ்க்காரப் பார்வையை மாற்ற வேண்டியதாகி இருக்கும். நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியதாக இருக்கும். உண்மையில் மாற்றங்களைக் கொண்டு வரும் எதையும் நாம் விரும்புவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் எதையும் மாற்றாமல் என்ன வேண்டுமானாலும் பேசவும், கேட்கவும்தான் தயாராக இருக்கிறோமே தவிர, செயல்படுத்தும்போதும் 'வாழ்க்கையை ஒரு துளி மாற்றுங்கள்' என்று சொல்லும்போதும், உடனே பின்வாங்க ஆரம்பிக்கிறோம்.உண்மையில் நம்முடைய வாழ்க்கையில் வஞ்சனைகளையும், கோபத்தையும், குரோதத்தையும் ஒரு துளியாவது குறைத்தோமானல், அதுமட்டும்தான் கலி முற்றாமல் நாம் தடுப்பதற்கும், உலகை காப்பதற்கும் நாம் செய்யும் ஒரே உபாயம்.

"விஷ்ணு வந்து உலகத்தைக் காப்பாற்றுவார் என்று நினைக்காதீர்கள்.
 நீங்கள் ஒவ்வொருவரும் விஷ்ணு."
 "நீங்கள் ஒவ்வொருவரும் கடவுள்"
உலகம் கலியில் மூழ்காமல் காக்கும் பொறுப்பு உங்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது.