THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

           



மருதமலை- மருதாசல மூர்த்தி் கோவில்

 

தல வரலாறு

கோவையிலிருந்து 11 கி.மீ தூரத்தில் மருதமலை உள்ளது. இந்தத் தலம் முருகன் உறையும் தலமாகும். மருதாசலமூர்த்தி என்று கீர்த்தி பெற்று திகழ்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் நடுவில் 5000 அடி உயரத்தில் அழகிய ஆலயம், அடிவாரத்தில் சிறிய மண்டபம், அருகில் விநாயகர் மலையை நோக்கியபடி உள்ளார். இவரை தான் தோன்றி விநாயகர் என்று குறிப்பிடுகிறார்கள். மலை ஏறத் தொடங்கி நடுப் பகுதிக்கு வந்தால் இடும்பன் சந்நிதி காணலாம். வட்டமான பெரிய பாறையின் முன்பு காவடி தூக்கிய இரண்டு அடி உயரம் கொண்ட இடும்பனைத் தரிசிக்கலாம். மேலே ஏறினால் பாம்பாட்டிச் சித்தர் குகையும்,பாம்பாட்டிச் சித்தர் சுனையும், மருதத் தீர்த்தம் அமுதமென இனிக்கும். தாகம் மட்டுமல்ல நோய் தீர்க்கும் அற்புத ஆற்றலும் பெற்றது. கருவறை சிறியது தான். நான்கு அடி உயரத்தில் மருதாசலமூர்த்தி, மருதமலை ஆண்டவன் எழுந்தருளியுள்ளான். அர்த்த மண்டபம், மகா மண்டபம் இவற்றில் மகா மண்டபம் விசாலமானதாகப் பக்தர்கள் அதிகம் பேர் நின்று தரிசிக்கும் வகையில் அமைந்துள்ளது. பிரகாரத்தைச் சுற்றி வந்தால் இடது புறம் ஈசனாக சிவலிங்கத்தையும் வலது புறம் ஈஸ்வரியாக மரகதாம்பிகையையும் கண்டு தரிசிக்கலாம்.

வெள்ளயங்கிரி சிவன் உருவமாகவும், நீலிமலை ஈஸ்வரி உருவமாகவும், நீலிமலை ஈஸ்வரி உருவமாகவும், மருதமலை முருகன் உருவமாகவும் ஆக இந்த மூன்றும் ஒன்றாக அமைந்த சோமாஷ்கந்த மூர்த்தியாக எழுந்தருளிய தலமாக இந்த மருதமலைக் குறிப்பிடுகின்றனர்.

மருதாசல மூர்த்தியின் இரண்டு புஜங்களிலும் தனி வெள்ளை அரளி புஷ்பங்களைச் சாத்துபடி செய்து, கொஞ்ச நேரங்கழித்து வலது புஜத்திலிருந்து அரளிப் புஷ்பம் கீழே விழுந்தால் அதனை நல்ல சகுனமாகவும், முருகன் கீழே உத்திரவு அளித்ததாகவும் கருதி எந்தக் காரியத்தையும் தொடங்கினால் நலமாக அமையும் என்பது இத்தலத்து மக்களின் நம்பிக்கை. ஆனந்தக் கூட்டம் என்ற இன மக்கள் முருகனின் மேற்படி வகையிலான உத்தரவு பெறாமல் பெண் கொடுப்பதும், கொள்வதும் இல்லையாம். இரண்டு, மூன்று நிமிடங்களுக்குள் உத்தரவு கிடைக்கவில்லை எனில், சில வாரம், சில மாதங்கள் வரகூட காத்திருப்பார்களாம். மகாவரப் பிரசாதிதான் இந்த மருதாசல மூர்த்தி!