THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 

           



காஞ்சி காமாட்சி் கோவில்

 



தமிழகத்தில் பல தலங்கள் உண்டு. தலங்களுக்கு வரலாறும் உண்டு. வரலாற்றுப்புகழ் மிக்கவை என்று குறிப்பிடத்தக்கவை சில உண்டு. அவற்றில் காஞ்சிபுரம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. தவமகிமையும் கொண்டது.
காஞ்சி மா நகரம் 2000 ஆண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றினைக் கொண்டதாகத் திகழ்கிறது. கி.மு.200 ஆண்டில் பதஞ்சலி முனிவரால் இயற்றப்பட்ட மகாபாஷ்யம் என்ற நூலிலும் சங்க இலக்கிய நூலான பெரும்பாணாற்றுப்படை, ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று எனத் திகழும் மணிமேகலை ஆகியவற்றிலும் காஞ்சிபுரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

குப்தர்கள் ஆண்ட காலத்தில் இருந்த வராஹமிகிரர் காஞ்சிபுரத்தைத் தமிழகத் தலை நகரமாகக் குறிப்பிட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் காஞ்சியில் போதனை செய்ததாக வரலாறு கூறுகிறது.

வடக்கே காசிக்குச் சென்றால்தான் முக்தி கிடைக்கும் என்பது அல்ல. இந்தக் காஞ்சித் தலத்திற்கு வந்து இந்தப் புண்ணிய பூமியின் மண்ணை 2500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்க பெருமைகள் மிகுந்த தமிழனின் தரத்தை தீரத்தை பிறருக்கு உணர்த்திய அன்னை காமாட்சியின் அடியொற்றிய அருள் திருமண்ணை மிதித்தாலும் போதும். நேரே சொர்க்கம் தான்!

மனிதனுக்கு முக்தி தரும் தலங்கள் அயோத்தியா, மதுரா, மாயா, (பூரி) காசி, அவந்திகா, துவாரகை இவற்றுடன் காஞ்சித் தலத்தைச் சேர்த்தால் ஏழு ஆகும். இந்த ஏழு முக்தித் தலங்களில் காஞ்சி மற்ற ஆறு தலங்களை விடவும் அதி மேன்மை பெற்றது என்று புராணம் கூறுகிறது.

இவ்வுலகை தேவியர் மூவர் அருளாட்சி புரிந்து வருகிறார்கள்! மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சி ஆகிய அவர்களே அந்த மூன்று தேவியர்! மூவரிலும் முதன்மை பெற்றவராகத் திகழ்வது காஞ்சி காமாட்சியே!
இந்தக் காஞ்சி மாநகரத்தில் உள்ள பிற கோவில்கள் அனைத்துமே காமாட்சி அம்மனுக்கு எதிரே முகமன் கூறும் விதத்திலேதான் அதாவது காமாட்சியைக் கண்டு தரிசிப்பதுபோல அல்லது மதித்துத் துதிப்பது போலவே அமைந்துள்ளன. இந்தத் தலத்தில் உள்ள ஏனைய கோவில்களின் தேர்களும் அன்னை காமாட்சியை வலம் வந்து செல்லும் வகையில் தான் வீதிகளும் அமையப் பெற்றுள்ளன. மற்ற கோவில்களில் குறிப்பாக சிவத்தலங்களில் தனியாக தேவி சன் நிதி இல்லை. அன்னை காமாட்சியே அனைத்து ஆலயங்களுக்குமாகச் சேர்த்து சக்திதேவி என அருளாட்சி புரிகிறாள்.

POOJAS TIMING

Abhishekam (3 times a day)

Morning - Starts at 5:30 a.m.

Afternoon - Starts at 10:30 a.m.

Evening - Starts at 4:30 a.m.

Santhana Kappu (Sandal Darshan)

Every Wednesday and Saturday evenings

Pournami Pooja / Navavarna Pooja (Full Moon day)

Night 9:30 p.m. onwards every month

Saharsranamam Archana (Daily)

Morning - 9:00 a.m. to 10:00 a.m.

Evening - 7:00 p.m. to 8:00 p.m.

Ashtothram Archana

Morning - 7:00 a.m. to 12:00 p.m.

Evening - 6:00 p.m. to 8:00 p.m.

Thanga Ratham (Golden Chariot)

Only on specific days