THIS WEBSITE IS UNDER CONSTRUCTION ....

விளம்பரங்கள்

 




சிதம்பரம் நடராஜர் கோவில்

 


 

தென்னார்க்காடு மாவட்டத்தில் சிதம்பரம் உள்ளது. இரயில் நிலையத்திலிருந்து சுமார் 11/2 கி.மீ தூரத்தில் நடராஜர் ஆலயம் உள்ளது.

கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு ஆகிய 4 வாயில்களைக் கொண்டும் ஒவ்வொரு வாயிலுக்கும் மேல் கோபுரங்களைக் கொண்டும் மிகவும் விஸ்தீரணமான பரப்பளவில் அற்புத எழில் கொஞ்சும் விதமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டும் இந்தத் தலத்தின் திருக்கோயில் கம்பீரமாகக் காண்போரைத் தன் வசம் ஈர்க்கிறது. தலம் தீர்த்தம் மூர்த்தி என மூன்று சிறப்புக்களையும் பெற்றது சிதம்பரம். சிதம்பரம் கோவிலுக்குப் பல சோழ மன்னர்கள் திருப்பணிகளைச் செய்திருக்கின்றனர்.

கி.பி. 9ம் நூற்றாண்டில் முதலாம் பராந்தகச் சோழன் சிற்றம்பலம் எனப்படும் சிற்சபைக்குப் பொன் வேய்ந்து உள்ளார். 13ம் நூற்றாண்டில் விக்ரம சோழன் நூற்றுக்கால் மண்டபத்தைக் கட்டியுள்ளார். இந்த விக்ரம சோழனின் புதர்வர்கள் இரண்டாம் குலோத்துங்கன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் மேலும் பல திருப்பணிகளைச் செய்துள்ளனர். 12ம் நூற்றாண்டில் சடையவர்மன் சுந்தர பாண்டியன், தான் பெற்ற வெற்றிகளை நினைவுச் சின்னமாகத் துலாபாரதானம் அளித்துள்ளார். இந்தக் கோவிலுக்கு மேலும் ராஜகோபுரத்தை கட்டியுள்ளார். தெற்குக் கோபுரத்தைப் பல்லவர் வழித் தோன்றலான கோப்பெருஞ்சிங்கன் கட்டியுள்ளார்.

அக்காலத்தில் தில்லைவனம் என்ற பெயரில் இத்தலம் திகழ்ந்து வந்தது. இந்தத்தலத்திலே சுயம்பு லிங்கமாக சிவலிங்கம் இருந்தது. வசிஷ்ட முனிவரின் வழித் தோன்றலான மாத்யந்தினர் தன் தந்தையின் அறிவுரை உபதேசம் 4 வேதங்கள் ஆறு சாஸ்திரங்கள் கற்பிக்கப்பட்டு ஆன்ம ஞானம் பெற்றுச் சிறக்க தில்லைவனத்தில் உள்ள சுயம்புலிங்கத்தைப் பூஜிக்கப் பணிக்கப்பட்டார். அவர் காசியிலிருந்து புறப்பட்டு இந்தத் தில்லைவனம் வந்து அடைந்து ஜோதியாய் விளங்கும் திருமூல நாதனைக் கண்டு அருகில் இருந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடித் தனது பூஜைகளைத் தினமும் தொடர்ந்து செய்து வந்தார். தான் பூஜிக்கும் இறைவனுக்குச் சூட்டுவதற்காக இரவு பொழுது முடியும் முன்னரே மலர்களையும் கனி வகைகளையும் தேடிக்கொண்டு வந்து பூஜை முடிக்கும் சித்தம் கொண்டவராக இருந்தார். பொழுது விடிந்த பின் மலர்களைக் கொய்தால் அவற்றில் உள்ள தேனைக்குடித்து வண்டுகள் மலர்களில் அமர்ந்து எழுந்ததனால் அவைகள் கசங்கிய தன்மை அடைவதனால் அந்த நிலையில் அவற்றை இறைவனுக்குச் சூட்டிட அவர் மனம் ஒப்பவில்லை. பொழுது விடிந்த நிலையில் ஒரு நாள் பூஜைக்கு ஏற்ற மலர்கள் கிடைக்காததால் மிகவும் மனம் வருந்தி அழுது இறைவனைத் தொழுத வேளையில் இறைவன் மனமிரங்கி அசாரியாக அவர் வருத்தத்திற்குக் காரணம் கேட்க, அவர் விஷயத்தைச் சொல்ல, மரங்களில் விரைந்து வழுக்கி விழாமல் ஏறும் வகையிலும் இருட்டுவேளையிலும் நன்கு பார்வை தீர்க்கத்தைத் தொரியும் வகையிலும் புலியின் பாதம் போன்ற அமைப்பினையும் தீர்க்கமான பார்வையையும் புலிக்கால் புலிக்கைகள் ஆகியவற்றையும் அருளி வியாக்கிரபாதர் என்று அவருக்குப் பெயரையும், அவர் இருந்த அந்தத் தில்லை வனத்தை வியாக்கிரபுரம் என்றும் புலியூர் என்றும் திருப்பெயர்களிட்டுச் சிவபெருமான் அருள்பாலித்தார். 

மகாவிஷ்ணுவைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் மகாவிஷ்ணு மூலம் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத் திரு மகிமையைக் கேட்டறிந்ததும் தானும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டுகளிக்கும் பேறு பெறவேண்டும் என்று பொரிதும் விருப்பம் கொண்டு சிவபெருமானை எண்ணித்தவம் இருக்க ஆதிசேஷ்னின் தவத்திற்கு மனமிரங்கிய பெருமானும் பூலோகம் சென்று அத்தரி முனிவருக்கும் அனுசூயைக்கும் பிள்ளையாகப் பிறந்து பாதி பாம்பு உருவத்துடன் மீதி மனித உடலுடனும் உருவம் கொண்டு தில்லைவனத்தில் தவம் இருக்கும் வியாக்கிர பாதரைக் கண்டு அவருடன் சேர்த்து இருந்தால் தை மாத குரு வாரத்தில் பெளர்ணமி திதியில் பூச நட்சத்திர சுப நாளில் தான் ஆனந்தத் தாண்டவம் ஆடிக்காட்டுவதாக வரம் தந்து அனுப்பினார். அவ்வாறே ஆதிசேஷனும் பதஞ்சலி எனப்பெயர் பெற்று தில்லைவனம் வந்து வியாக்கிரபாதருடன் சேர்ந்து கொண்டார்.

குறிப்பிட்ட நாளில் சிவபெருமானும் வந்து அவர்கள் அனைவா¢ன் முன்னும் ஆனந்தத்தாண்டவத்தை அற்புதமாக ஆடிக்காட்டி அருள்புரிந்து அவர்கள் பரிதும் வேண்டிக் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி அவர்கள் பூஜையை ஏற்றுக்கொள்வதாகவும் எந்தக் காலமும் அந்த ஞானசபையில் ஆனந்த நடனம் பு¡¢ந்து காட்சி அளித்து அனைத்து உயிரினங்களும் நான்கு பெரும் பேறுகளான அறம் பொருள் இன்பம் வீடு என்பவற்றைப் பெற அருள்வதாகவும் வாக்களித்தார்.

இன்றும் ஞானசபை கனகசபை ஆகியவற்றைச் சுற்றிலும் அன்று அந்த நாளில் பெருமான் ஆடிக் காட்டிய ஆனந்தத் தாண்டவத்தைக் கண்டு களிக்கும் வண்ணம் களித்து மகிழும் வண்ணம் மகாவிஷ்ணு, மகாலட்சுமி, பிரம்மா, தேவாதி தேவர்கள் அனைவரும் முனிசிரேஷ்டர்கள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேச்வரர் ஆகியோர் கொலுவாக வீற்றிருக்கும் காட்சியைக் காணலாம். தில்லை மூவாயிரவர்களாக பிற்காலத்தில் பாவிப் பெருகி பூஜை செய்யும் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்ட மூலவர்கள் என்று கருதப்படுபவர்கள் வியாக்கிரபாதரும் பதஞ்சலியும்.

ஆதியில் தில்லை வனத்திலே சுயம்பு லிங்கமாக எழுந்து அருளிய சிவலிங்கம், இந்தத் திருக்கோயில் கர்ப்பக்கிருஹத்தில் திருமூலட்டானேஸ்வரர் ஆவார். இவரைச் சுற்றித்தான் கோயில் அமைந்துள்ளது.